• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி கோரிக்கை!

100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி கோரிக்கை!

சோனியா காந்தி

சோனியா காந்தி

ஊரடங்கு உத்தரவு முடிந்த பின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அவர்களுக்கு பணி வழங்கிவிட்டு இந்த தொகையை கழித்துக் கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற மக்களுக்கு 21 நாட்களுக்கான ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஊரடங்கு உத்தரவால் கிராமப்புற மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும், மாற்று பணிகளை செல்லும் வாய்ப்பில்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதனால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் 21 நாட்களுக்கான ஊதியத்தை முன் கூட்டியே வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். ஊரடங்கு உத்தரவு முடிந்த பின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அவர்களுக்கு பணி வழங்கிவிட்டு இந்த தொகையை கழித்துக் கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

    Also see...





    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.









    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: