கொரோனா பாதித்த தாயை பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற மகன்

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதியான தாயை அவரது மகன் பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொரோனா பாதித்த தாயை பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற மகன்
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதியான தாயை அவரது மகன் பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
  • News18
  • Last Updated: July 2, 2020, 6:26 PM IST
  • Share this:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல மாநிலங்களில் சமூகப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்டுப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

இந்த நிலையில், ஆந்திராவில் பெற்ற தாயை, கொரோனா பாதிப்பு காரணமாக பேருந்து நிலையத்திலேயே அவரது மகன் விட்டுச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

குண்டூர் மாவட்டம் மாச்சர்லா பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு 68 வயதான மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரிடம் சென்று விசாரித்தபோது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்ததாகவும் அப்போது கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதியானது.

படிக்க: Fact Check | கொரோனாவால் இறந்தவர்களின் உடல் ஹெலிகாப்டரிலிருந்து கடலில் வீசப்பட்டதா?
படிக்க: பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
இதனை அடுத்து எனது மகன் இங்கு கொண்டு வந்து விட்டு சென்று விட்டான் என்று தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு வந்து அவரை கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த மூதாட்டி அமர்ந்திருந்த சுற்றுப்பகுதியில் கிருமி நாசினிகளை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் குண்டூர் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading