சளியினால் கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகுமா?

சாதாரண சளி வந்தால் கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தியை அது அதிகரிக்கும் என சில ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன.

சளியினால் கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகுமா?
மாதிரி படம்
  • Share this:
அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வராதவர்களை பரிசோதித்து பார்த்ததில் 50% மேலானவர்களுக்கு டி செல் எனப்படும்  வெள்ளை அணுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் தான் அவர்களுக்கு  கொரோனா தொற்று வராமல் இருந்திருக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த டி செல்கள் வைரஸ்களால் ஏற்படும் சாதாரண சளி வரும் போது உருவாகும். எனவே தான் குழந்தைகளில் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

வெளிநாடுகளில் நடத்தப்பட்டுள்ள ஆய்வுகள் இப்படி தெரிவித்தாலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், சளி வந்திருந்தால் கொரோனா வராது என அறுதியிட்டு கூற முடியாது என கூறுகின்றனர்.

Also read... கொரோனா பாதிப்பால் காவலர் உயிரிழப்பு - சென்னை காவல்துறையில் மூன்றாவது மரணம்இது வரை கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தி யாருக்கும் கிடையாது. நோய் தொற்று ஏற்படுவத்றகான பாதிப்பு அனைவருக்கும் சமமாகவே உள்ளது. அந்த தொற்று எந்த வகையான பாதிப்பை உடலில் ஏற்படுத்துகிறது என்பது அவரவர் உடல் நிலையை பொருத்து உள்ளது என காவேரி மருத்துவமனை தொற்று நோய் நிபுணர் விஜயலட்சுமி கூறுகிறார்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading