1000 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கிய சமுக ஆர்வலர்!

இவர் வீடு வீடாகச் சென்று 1000 வீடுகளுக்கு தலா 10 கிலோ என மொத்தம் 10 டன் அரிசி வழங்கியுள்ளார்.

1000 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கிய சமுக ஆர்வலர்!
1000 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் சமுக ஆர்வலர்.
  • Share this:
ஊரடங்கு உத்தரவால் சிரமப்படும் 1000 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கியிருக்கிறார் சமுக ஆர்வலர் சி.ஆர். சுந்தரராஜன்.

சென்னையில் பல்வேறு தொழில் நிறுவனம் நடத்திவரும் சமூக ஆர்வலர் சி.ஆர். சுந்தரராஜன் தனது சொந்த கிராமமான
சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் 10 டன் அரிசி வழங்கியிருக்கிறார்.


விவசாயம் வேலை உள்ளிட்ட கூலி வேலைக்குச் செல்லும் பச்சேரி, காந்திநகர், மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களைச் சார்ந்த மக்களின் பொருளாதார சிரமத்தைப் போக்கிட வீட்டுக்கு 10 கிலோ அரிசி கொடுத்துள்ளார். இவர் வீடு வீடாகச் சென்று 1000 வீடுகளுக்கு தலா 10 கிலோ என மொத்தம் 10 டன் அரிசி வழங்கியுள்ளார்.

இலவசமாக இப்படி அரிசி வழங்கும் சேவையை ஊராட்சி மன்றத்தினர், உறவினர்கள் மூலமாகச் செயல்படுத்தியிருக்கிறார். இக்கட்டான சூழ்நிலையில் இது போன்ற உதவிகளைச் செய்யும் இவரை கிராம மக்கள் பாராட்டுகின்றனர்.

Also see:
First published: March 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading