அந்த உயிரினத்திடம் இருந்துதான் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கும் - ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

அந்த உயிரினத்திடம் இருந்துதான் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கும் - ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு
கொரோனா
  • News18
  • Last Updated: March 30, 2020, 8:00 PM IST
  • Share this:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா, சீனாவில் அழிந்து வரும் ஒரு சிறிய உயிரினத்திடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தென் சீனாவில் ஹார்ஸ்ஹூ வவ்வால்களில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பெயரிடப்படாத ஒரு கிருமி வாழ்ந்து வந்தது. வவ்வால்களின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி அந்த வைரஸ் தன்னை பாதிக்காமல் பார்த்துக்கொண்டது. அந்த வவ்வால்கள் பரிணாம வளர்சியடைய, அவைகளுக்கு தெரியாமலேயே அந்த கிருமியும் தன்னை தற்காத்துக்கொண்டு நீடித்தது. அந்த கிருமிதான் கொரோனா வைரசின் மூதாதையரான SARS Cov 2.

அறியப்படாத சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு, வவ்வால்கள் வழக்கமாக இரைதேடி புறப்பட்ட போது, கொரேனாவின் மூதாதையர் மற்றொரு உயிரியின் உடலுக்குள் கடத்தப்பட்டனர். அந்த புதிய உயிரினத்தின் பெயர் பேன்கோலின் அல்லது எறும்புத் திண்ணி. வைரஸ்கள், ஒரு உயிரினத்திடமிருந்து மற்றொரு உயிரினத்திற்கு கடத்தப்படும்போது, புதிய உயிரினத்தின் செல்களுக்குள் நுழைவதற்கு ஏற்ப தன்னை உருமாற்றிக்கொள்வதுடன் மேலும் வலுவானதாக மாறுகின்றன. அவ்வாறே, எறும்பு திண்ணியின் உடலிலும் உறுமாற்றிக்கொண்டு உயிர் வாழ்ந்துள்ளது கொரோனா வைரஸ்.
சர்வதேச சந்தையில் நல்ல விலைபோகக் கூடிய இந்த எறும்பு திண்ணி சீனாவின் வேட்டைக்காரர்களுக்கு மிகுந்த விருப்பமான உயிரினம். தென் சீனாவில் விலங்குளை விற்கும் கள்ளச்சந்தையில் இந்த எறும்பு திண்ணிகள் தற்போதும் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இடத்தில்தான், எறும்பு திண்ணியிலிருந்து கொரோனா தனது புதிய இருப்பிடத்தை தேர்வு செய்ததாக நம்பப்படுகிறது. அந்த புதிய இருப்பிடம்தான் மனித இனம்.

கள்ளச்சந்தையில் எறும்புதிண்ணியை தொட்டவருக்கு வைரஸ் பரவியிருக்க வேண்டும். அதே கையில் அவர் கண்களை கசக்கியிருக்க வேண்டும் அல்லது கையை வாயில் வைத்திருக்க வேண்டும். அப்போது அவருடைய உடலுக்குள் நுழைந்த கொரேனா வைரஸ் மனித செல்களுக்குள் ஊடுருவும் வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. இவ்வாறே உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading