மாநகராட்சிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி - முதல்வர் பழனிசாமி

சிறிய வழிபாட்டுத் தலங்களை வரும் 10-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிப்பாட்டிற்காக திறக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி - முதல்வர் பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
  • Share this:
சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களை வரும் 10-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிப்பாட்டிற்காக திறக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்துள்ளார்.

அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 10000 ஆண்டு வருமானத்துக்கு குறைவாக உள்ள சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் ஆகியவற்றை 10.08.2020 முதல் திறக்கலாம் என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாநகராட்சிகளில் ஆட்சியரிடமும் இதற்கான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


ஏற்கெனவே, தமிழகம்முழுவதும் உள்ள கிராமம், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்,  ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading