டெய்லர்களை காவல் நிலையத்திற்கே கூட்டி வந்து முகக்கவசம் தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்...!

டெய்லர்களை காவல் நிலையத்திற்கே கூட்டி வந்து முகக்கவசம் தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்...!
இன்ஸ்பெக்டர் மோகன்
  • Share this:
முககவசம் தட்டுபாடால் டெய்லர்களை காவல் நிலையம் கூட்டி வந்து தினசரி முககவுசம், கையுறைகள் தயாரிப்பு தொடர் சேவையில் ஈடுபட்டுள்ளார் சிவகங்கை இன்ஸ்பெக்டர்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இருப்பவர் மோகன். தற்போது இவரின் தொடர் சேவையால் அனைவரின் கவனமும் இவர் மேல்தான் திரும்பியுள்ளது.

கடந்த மாதம் ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை தனது பணிகளையும் கவனித்து கொண்டு தொடர்ந்து தனது சொந்த பணத்திலும் சேவையை தொடர்ந்து உள்ளார்.


அதில் தினமும் சிவகங்கை அருகே உள்ள பையூர் நரிக்குறவர்களுக்கு  500 பேருக்கு உணவு அளித்து வருவது மட்டுமல்லாமல், தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், ஹேண்ட் சானிடைசர், சோப்பும் வழங்கி வருகிறார்.

வட மாநில தொழிர்களுக்கு உணவு வழங்குவது மட்டும் இல்லமால் தற்போது முகக்கவசம் தட்டுபாடு கடுமையாக இருப்பதால் இன்ஸ்பெக்டர் மோகன், இரு டெய்லர்களை தனது காவல் நிலையத்திற்கு வரவழைத்து அங்கேயே துணிகளை வாங்கி கொடுத்து முகக்கவசத்தை தைத்து பொது மக்கள், போலீசார் மற்றும் சமுக பணி செய்பவர்கள் என யார் கேட்டாலும் இலவசமாக கொடுத்து வருகிறார்.

Also see...
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading