Home /News /coronavirus-latest-news /

ஊரடங்கு : உற்பத்தியான செங்கற்களை விற்பனை செய்ய உரிமையாளர்கள் கோரிக்கை..!

ஊரடங்கு : உற்பத்தியான செங்கற்களை விற்பனை செய்ய உரிமையாளர்கள் கோரிக்கை..!

கோப்புப்படம்

கோப்புப்படம்

மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக உற்பத்தி செய்யப்பட்டசெங்கற்களை விற்பனை செய்ய குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொழிற்சாலை உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட செங்கல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் இருந்து தினசரி லட்சக்கணக்கான செங்கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக  அனுப்பபடுகின்றன.

வெளிமாவட்ட வியாபாரிகள் மொத்தமாக செங்கற்கள் தேவைப்படும் நிலையில் செங்கல் தொழிற்சாலைகளுக்கு முன்பணம் வழங்குதும் உண்டு. ஒவ்வொரு செங்கல் தொழிற்சாலைகளிலும் 50 முதல் 100 தொழிலாளர்கள் வரை பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு தினசரி அவர்களின் பணி செய்வதை பொறுத்து 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். பெரும்பாலான செங்கல் தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 21 நாட்களாக செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலரும் உணவின்றி தவித்து வருகின்றனர். சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதி இல்லாத நிலையில் வேலையும் இன்றி செங்கல் உரிமையாளர்கள் வழங்கும் உணவின் மூலம் உயிர் பிழைத்து வருகின்றனர்.

செங்கல் தொழிற்சாலைகளில் தற்போது உற்பத்தி செய்யப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செங்கற்கள் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் செங்கல் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றது.

வெளியூர்களுக்கு செங்கற்களை லாரிகள் மூலம் அனுப்புவது வழக்கம். லாரிகள் ஒரிடத்தில் இருந்து வேறிடம் செல்ல இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே அவசியம் கருதி வாரத்தில் ஓரிரு நாட்கள் செங்கற்கள் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.

மேலும் இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவும் வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை அடைக்கவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் மட்டுமே முடியும் என்ற சூழலில் செங்கல் தொழிற்சாலை உரிமையாளர்கள் அரசின் உத்தரவிற்காக காத்திருக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Sivagangai

அடுத்த செய்தி