Home /News /coronavirus-latest-news /

மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கை - 20 நாட்களாக புதிய தொற்று கண்டறியப்படாத சிவகங்கை

மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கை - 20 நாட்களாக புதிய தொற்று கண்டறியப்படாத சிவகங்கை

மூலிகை கசாயம்

மூலிகை கசாயம்

நிலவேம்பு கசாயம், பின்னர் கபசூர குடிநீர் என இந்த மருந்துகள் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்கப்பட்டது.

சிவகங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் கடந்த 20 நாட்களாக புதிய கொரோனா தொற்று இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்த நிலையில், கடந்த 20 நாட்களாக புதிய தொற்றுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

மாவட்ட நிர்வாகம் சார்பில், நோயை தடுக்கும் விதமாக முதலில்  கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும்,  ஓராக் டீ   Orac -T (oxygen radical apsaration capacity)  எனும் சித்த மருந்துகள் அடங்கிய டீயை பருகக் கூறினர். இதில் கிஸ்மிஸ் பழக் கொட்டை, நாட்டு மாதுளை விதை, சுருள் பட்டை,  ஓமம், சீரகம், மஞ்சள், கிராம்பு, அதிமதுரம், கோக்கோ பவுடர் அனைத்தும் கலந்திருக்கும். இந்த டீ அதிகளவில் கொடுக்கப்பட்டன.

இந்த டீ மனிதனின் இதயத்தை பலப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.  சிவகங்கை நகரில் உள்ள 27 வார்டுகளிலும் 45 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். முதலில் நிலவேம்பு கசாயம், பின்னர் கபசூர குடிநீர் என இந்த மருந்துகள் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்கப்பட்டது.

இந்த ஓரக் டீ, விநியோகத்தை  சிவகங்கை அரண்மனை வாசலில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் இன்று காலை முதல் வழங்கி வருகிறார்.

நீண்ட வரிசையில் நின்று பொதுமக்களும்  சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் இந்த கசாயத்தை அருந்தினர். மேலும் சுகாதாரத்துறையினர் காவல்துறையினருக்கும் இந்த கசாயம் வழங்கப்பட்டது.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Sivagangai

அடுத்த செய்தி