• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக கொரோனா பரிசோதனை - அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக கொரோனா பரிசோதனை - அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலே தமிழகத்தில்தான் 37 லட்சம் பரிசோதனைகள் எடுக்கபட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சிவகங்கையில் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகங்கை பழைய அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரரோன வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்அர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் பாதிப்பை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் 42 ஆயிரம் பரிசோதனைகள் எடுக்கபட்டுள்ள நிலையில், 2828 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 234 கர்ப்பிணி தாய்மார்கள் சிவகங்கை மாவட்ட மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையினால் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதேபோல் 82 வயது முதியவர், கேன்சர் இருந்து கொரரோன தொற்று பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவிலே அதிகமான கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டுமே, 37,11,046 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.





அரசு மருத்துமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இருந்து வருவதாகவும், அதனால் ரயில்களில் அமைக்கப்பட்ட சிறப்பு வார்டுகளின் படுக்கைகள் தேவைபடவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தர். அமைச்சர் ஆய்வு இருப்பதாக கூறியதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மாலை 6 மணி முதல் காத்திருந்த நிலையில், இரவு 10 மணிக்கு ஆய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: