Home /News /coronavirus-latest-news /

சிவகங்கையில் அரசு மருத்துவமனை துப்பரவு பணியாளர்கள் போராட்டம்

சிவகங்கையில் அரசு மருத்துவமனை துப்பரவு பணியாளர்கள் போராட்டம்

போராட்டம் நடத்தும் அரசு துப்பரவு பணியாளர்கள்

போராட்டம் நடத்தும் அரசு துப்பரவு பணியாளர்கள்

மருத்துவர்கள் செவிலியர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளை துப்புரவு செய்யும் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததை கண்டித்தும் கொரானா வார்டுக்கு செல்ல போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்யாததை கண்டித்தும் பணியை புறக்கணித்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த மாத ஊதியம் வழங்காததை பலமுறை கேட்டும் வழங்காததால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளை துப்புரவு செய்யும் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

அரசு ஊதியம் பெறும் ஊழியர்களை விட துப்புரவு பணிகளில் மிகக் குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும், இவர்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொருவர் கொரானா வார்டுகளை பராமரிக்க வேண்டும் என்று நிறுவன நிர்வாகிகள் நிர்பந்தப்படுத்தி பணிக்கு அனுப்புகிறனர்.

பணிக்குச் செல்லும் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்திட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Also see...











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vaijayanthi S
First published:

Tags: Corona Warriors, CoronaVirus, Govt hospital, Sivagangai

அடுத்த செய்தி