• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • வயலிலேயே காய்ந்து வரும் கரும்புகளால் விவசாயிகள் வேதனை..!

வயலிலேயே காய்ந்து வரும் கரும்புகளால் விவசாயிகள் வேதனை..!

கரும்பு

கரும்பு

பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்ட நிலையில் தொடர் நெருக்கடி காரணமாக தற்போது கரும்பு பயிரிட்ட விவசாயிகளும் மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

  • Share this:
சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெட்டு கூலி ஆட்கள் வராததால் கரும்புகள் வெட்டப்படாமல் வயலியே காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் படமாத்துர் கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டது. இதனை நம்பி திருப்புவனம், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் எக்டேரில் கரும்பு நடவு செய்யப்பட்டு வருகிறது.

தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு அறுவடை செய்யப்பட்ட கரும்புகளுக்கு பணம் தராததால் பெரும்பாலான விவசாயிகள் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது ஒருசில விவசாயிகள் மட்டுமே கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரும்பு விவசாயி


சிவகங்கை மாவட்டத்தில் தற்போது சுமார் 10 ஆயிரம் எக்டேரில் மட்டுமே கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளது. கடலூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்துதான் கரும்பு வெட்ட ஆட்கள் வருவது வழக்கம். சர்க்கரை ஆலை நிர்வாகம் குறிப்பிடும் நாட்களில்தான் கரும்புகள் வெட்டப்படும். 12 மாதத்தில் வெட்டப்பட வேண்டிய கரும்புகள் 16 மாதங்கள் ஆகியும் இன்று வரை சர்க்கரை ஆலை நிர்வாகம் கட்டிங் ஆர்டர் கொடுக்கவில்லை.

மேலும் வெளிமாவட்டத்தில் இருந்து கூலி ஆட்கள் வர தடை இருப்பதால் கரும்புகள் வெட்டப்படாமல் வயலிலேயே காய்ந்து வருகிறது. ஏக்கருக்கு 40 டன் கரும்புகள் கிடைத்த நிலையில் கரும்புகள் காய்ந்து விட்டதால் எடை பெருமளவு குறைந்து ஏக்கருக்கு 30டன் வரைதான் கிடைத்துள்ளன.

மேலும் சிவகங்கையில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் ஈரோடு மாவட்டத்தில் ஆப்பகூடல் நகரில் உள்ள அரவை ஆலைக்கு கொண்டு செல்லப்படுவதால் கடும் வெயில் காரணமாக அதன் மேலும்  எடை குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 40 சர்க்கரை ஆலைகள் மூலம் 2 கோடி டன் கரும்புகள் ஒவ்வொரு சீசனின் போதும் அரைக்கப்பட்ட நிலையில் தற்போது 10 ஆலைகள் மூலம் வெறும் 30 லட்சம் டன் கரும்புகள் மட்டுமே அரைக்கப்பட்டு வருகின்றன.

கடும் வறட்சி, உரிய நேரத்தில் பணம் கிடைக்காமை போன்ற காரணங்களால் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்ட நிலையில் தொடர் நெருக்கடி காரணமாக தற்போது கரும்பு பயிரிட்ட விவசாயிகளும் மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். எனவே கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து கரும்பு சாகுபடியில் ஈடுபட முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: