• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சிவகங்கையில் கொரோனா ஒழிந்த மகிழ்ச்சியில் மானாமதுரைக்கு சாமி கும்பிட வந்த மாவட்ட ஆட்சியர்!

சிவகங்கையில் கொரோனா ஒழிந்த மகிழ்ச்சியில் மானாமதுரைக்கு சாமி கும்பிட வந்த மாவட்ட ஆட்சியர்!

சிவங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்.

சிவங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்.

கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டி அவர் வழிபாடு செய்தார்.

  • Share this:
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. அந்த மகிழ்ச்சியில் மானாமதுரையில் உள்ள கோவிலுக்கு ஆட்சியர் ஜெயகாந்தன் சாமி கும்பிட வந்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 11 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து மீதமிருந்த ஒருவரும்  குணமடைந்ததால் அவரை அந்த மாவட்டத்தின் ஆட்சியர் ஜெயகாந்தனும் அதிகாரிகளும் இனிப்பு கொடுத்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஜோதி வடிவில் ஜீவ சமாதி அடைந்த மகானும், கர்நாடக இசை கலைஞர்களின் குருவாகப் போற்றப்பட்டு வருபவருமான ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் ஆராதனை தினம் நேற்று  நடைபெற்றது. வருடந்தோறும் அங்கு ஏராளமான கர்நாடக இசை கலைஞர்கள் ஒன்றுகூடி இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால், இந்த வருடம் கொரோனா தொற்று பிரச்னையால் விழா நடைபெறவில்லை.

இந்நிலையில் ஆராதனை விழாவைப் பற்றியும், சதாசிவ பிரம்மேந்திராளின் அற்புதங்களையும் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், அவரது ஜீவ சமாதி உள்ள மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலுக்கு வந்து சிறப்புப் பிரார்த்தனை செய்தார். மேலும், கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டி வழிபாடு செய்தார். அவருடன் சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் வந்தனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: