சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சித்த மருத்துவ பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளுக்கும் கபசுர குடிநீர் மூலிகை பொடி உள்ளிட்ட சித்த மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டிகளை கதர் மற்றும் காதி துறை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் 445 ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றதால் கூட்டம் அதிகமானது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
அமைச்சர் பாஸ்கரன் பெயரளவில் 10 பேருக்கு கொடுத்து விட்டு கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்றார். ஊருக்கு உபதேசம் செய்யும் மாவட்ட நிர்வாகமே சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. சில தினங்களுக்கு முன்பு காரைக்குடியில் நடைபெற்ற அமைச்சர் விழாவில் இலவச நிவாரண பொருட்கள் வழங்கும் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூடியதால் தள்ளமுள்ளு ஏற்பட்டு கீழே விழுந்தனர்.
இதுபோன்று தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொள்ளும் விழாக்களில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.