கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிய சிவகங்கை!

சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கெளரவித்தார்.

  • Share this:
சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பத்தூரைச் சேர்ந்த நபர் குணமடைந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டம் ஆனது.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே 11 பேர் குணமடைந்தனர். சிவகங்கை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபர் (திருப்பத்தூர்) குணமடைந்ததையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை ஆட்சியர் ஜெயகாந்தன், டீன் ரெத்தினவேலு மற்றும் மருத்துவர்கள் இனிப்பும் மலர்கொத்தும் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கெளரவித்தார். பின்னர் வேன் மூலம் குணமடைந்தவரை அனுப்பிவைத்தனர். இதன் மூலம் சிவகங்கை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

அதேபோல் ராமநாதபுர மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தவரும், குணமடைந்து இன்று சொந்த ஊருக்கு மருத்துவக் குழுவினர்களால் அனுப்பிவைக்கப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றுவரை பாதிக்கப்பட்ட 20 பேரில் 11 பேர்  சிகிச்சைக்குப் பின் ஏற்கனவே குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். எஞ்சிய 9 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தினின் தொடர் நடவடிக்கையால் கொரானா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது.

சிவகங்கையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலுக்கு வந்து ஆட்சியர் ஜெயகாந்தன் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.  கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கவும் வேண்டி வழிபாடு செய்தார்.மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஜோதி வடிவில் ஜீவ சமாதி அடைந்த மகானும், கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்பட்டு வரும் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் ஆராதனை தினம் நடைபெறுகிறது. வருடந்தோறும் இதனையொட்டி ஏராளமான கர்நாடக இசை கலைஞர்கள் ஒன்று கூடி இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம், ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று பிரச்சனையால் விழா நடைபெறவில்லை. ஆராதனை விழாவைப் பற்றியும், சதாசிவ பிரம்மேந்திராளின் அற்புதங்களையும் கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கோயிலுக்கு வந்து தரிசனம் மேற்கொண்டார்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: