• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Vaccination : பிரதமர் மோடி மக்களை அழிக்கும் பணிக்கு தலைமை தாங்குகிறார் - சீதாராம் யெச்சூரி

Vaccination : பிரதமர் மோடி மக்களை அழிக்கும் பணிக்கு தலைமை தாங்குகிறார் - சீதாராம் யெச்சூரி

சீதாராம் யெச்சூரி

சீதாராம் யெச்சூரி

மக்களை அடியோடு அழிக்கும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவதாக குற்றம் சாட்டியுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடும் பணியை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    இது குறித்து சீதாராம் யெச்சூரி தமது ட்விட்டர் பதிவில், “கொரோனா தடுப்பூசி போடும் பணியில் கடந்த 6 வாரங்களில் 67 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி என்ன செய்கிறார்? இதுவரை இல்லாத அளவிற்கு மக்களை அடியோடு அழிக்கும் பணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறார்.

    தானே உருவாக்கிய சுகாதார நாசத்தில் இருந்து தனது பொறுப்பை தட்டிக்கழித்து மாநிலங்கள் மீது சுமையை திணித்து விட்டார். இப்போதாவது அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடும் பணியை தொடங்க வேண்டும்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குங்கள். ஏழைகளுக்கு பணமும், உணவு தானியங்களும் அளியுங்கள். ‘சென்டிரல் விஸ்டா’ திட்டத்தை நிறுத்துங்கள். பி.எம்.கேர்ஸ் நிதியை விடுவியுங்கள். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடியை தடுப்பூசிக்கு செலவிடுங்கள்.” என கூறியுள்ளார்.

    இந்நிலையில், தடுப்பூசியை விரைவு படுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “தடுப்பூசியை விரைவு படுத்துங்கள் காலதாமதம் செய்யாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார். தனது பதிவோடு இந்தியாவில் 70 சதவீத மாவட்டங்களில் 100-பேரில் 20 க்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளதாக வெளியிடப்பட்ட நாளிதழ் செய்தியையும் அதில் இணைத்துள்ளார்.

    இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,62,89,290 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 4,194 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,95,525 ஆக உயர்ந்துள்ளது.

    வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,30,70,365 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,57,630 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 29,23,400 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    Must Read : இலவசத் தடுப்பூசி : பிரதமர் மோடிக்கு முன்னாள் அதிகாரிகள் வேண்டுகோள்

     

    நேற்று வரை நாடு முழுவதும், 19,33,72,819 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: