கொரோனா வைரஸ் தாக்கி பிரபல பாடகர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் தாக்கி பிரபல பாடகர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
கொரோனா
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் ஆடம் ஸ்ஹெல்சிங்கர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 52.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 48 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கை கடைபிடித்து வந்தாலும், அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.

இன்னும் இந்தக் கொடிய வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாமல் வல்லாதிக்க நாடுகளே விழி பிதுங்கி நிற்கின்றன.


இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடஜர் ஆடம் ஸ்ஹெல்சிங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவு உலகம் முழுக்க இருக்கும் இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல நடிகர் டாம் ஹாங்ஸ் உள்ளிட்டோர் ஆடமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கையில், சுவாசக் கருவிகள் மூலம் ஆடம் சுவாசித்து வருகிறார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அவரது மரணம் குடும்பத்தார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க: கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்டேனா? - நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் விளக்கம்First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading