• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சிங்கப்பூரில் ஜூன்1 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு..!

சிங்கப்பூரில் ஜூன்1 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு..!

சிங்கப்பூரில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 1-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தற்காலிகமாக மே 4-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு ஜூன் 1- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்து சிங்கப்பூரில் தங்கி பணியாற்றும் தொழிலாளர்களிடம் தொற்று அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    2-வது நாளாக அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்ததால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 29-ஆம் தேதி சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 102-ஆக இருந்த நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி அது 1000 -ஆக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...







    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: