850 படுக்கைகளுடன் ஆய்வக வசதி... குருத்வாராக்களை கொரோனா மையங்களாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் - குருத்வாரா நிர்வாகம்

டெல்லி சீக்கிய குருத்வாரா கமிட்டி நேற்று அறிவித்துள்ள அறிவிக்கையின்படி, குருத்வாராக்களையும், ஆணையத்தின் கீழ் இருக்கும் கல்வி நிலையங்களையும் கொரோனா மையங்களாக பயன்படுத்திக்கொள்ளலாம் என டெல்லி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

850 படுக்கைகளுடன் ஆய்வக வசதி... குருத்வாராக்களை கொரோனா மையங்களாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் - குருத்வாரா நிர்வாகம்
இஸ்லாமியர்களை அழைக்கும் டெல்லி குருத்வாராக்கள்
  • Share this:
டெல்லி சீக்கிய குருத்வாரா கமிட்டி நேற்று அறிவித்துள்ள அறிவிக்கையின்படி, குருத்வாராக்களையும், ஆணையத்தின் கீழ் இருக்கும் கல்வி நிலையங்களையும் கொரோனா மையங்களாக பயன்படுத்திக்கொள்ளலாம் என டெல்லி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

மொத்தமான 850 படுக்கைகளை அமைக்கக்கூடிய இடவசதியை குறைவான கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கும், தீவிரத்தன்மை குறைவான கொரோனா தொற்று உடையவர்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என DSGMC  குருத்வாரா ஆணையத்தின் தலைவர் மஞ்சீந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் பரமாரிப்பு, ஆய்வக வசதிகளும் இங்கு செய்து தரப்படும் என உறுதியளித்துள்ள அவர், குருநானக் பியோ சாஹிப் திருமண திடலில் 200 படுக்கைகளும், குரு ஹர்க்ருஷ்ணன் யாத்ரி நிவாஸில் 235 படுக்கைகளும், குரு அர்ஜுன் தேவ் யாத்ரி நிவாஸில் 60 படுக்கைகளும், குரு கர்கோபிந்த் நிறுவனத்தின் 11 படுக்கைகளும், குரு ஹர்கிருஷ்ணன் பொதுப்பள்ளியில் 100 படுக்கைகளும், குருத்வாரா தம்தமாவில் 40 படுக்கைகளும், குரு தேக் பஹதூர் பாலிடெக்னிக் நிறுவனத்தில் 50 படுக்கைகளும் தருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

நோயாளிகளின் நிலை மோசமடைந்தால், அவர்களை கொரோனா சிற்ப்பு மருத்துவமனைகளுக்கு மாற்றிக்கொள்ளுமாறு அதன் தலைவர் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading