இந்தியாவில் முழு ஊரடங்கை அமல்படுத்துங்கள்: அமெரிக்க மருத்துவர் யோசனை!

இந்தியாவில் முழு ஊரடங்கை அமல்படுத்துங்கள்: அமெரிக்க மருத்துவர் யோசனை!

ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் சில வாரக் காலம் முழூ ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என  அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரான அந்தோணி ஃபௌசி ஆலோசனை தெரிவித்துள்ளார்

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் சில வார  காலம் முழூ ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என  அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரான அந்தோணி ஃபௌசி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

  நாடு முழுவதும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தினசரி பாதிப்பில்  இதுவரை இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஏற்பட்டுள்ள  இந்த அசாதாரண சூழலை எதிர்கொள்ள பல்வேறு நாடுகளும் நேச கரங்களை நீட்டியுள்ளன.

  இந்நிலையில், இந்தியாவின் கொரோனா சூழல் குறித்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு  அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரும் தலைசிறந்த பெருந்தொற்று தடுப்பு நிபுணருமான  அந்தோணி ஃபௌசி பேட்டியளித்துள்ளார். அதில்,  இந்திய அரசாங்கம் சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

  தற்போது , இந்தியா கடுமையான மற்றும்  நம்பிக்கையற்ற நிலையில்  இருப்பதாக தெரிவித்துள்ள ஃபௌசி, நாடு முழுவதும் தற்காலிகமாக முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார்.  ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை உடனடியாக தேவையாக பெற்று, அதனை விநியோகிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  சீனாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதையடுத்து, அவர்கள் முழு ஊரடங்கை பிறப்பித்தனர். இந்தியாவில் 6 மாத காலம் அளவுக்கு ஊரடங்கு பிறப்பிக்க தேவையில்லை பரவலை தடுக்க  தற்காலிக ஊரடங்கை பிறப்பித்தாலே போதுமானது ‘ என்று குறிப்பிட்டுள்ள அந்தோணி ஃபௌசி, மக்களுக்கு  தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்றும்  சீனாவில் மருத்துவ  தேவை அதிகரித்த சில நாட்களிலேயே அவர்கள் மருத்துவமனைகள், அவசர மையங்கள் ஆகியவற்றை கட்டி முடித்ததாகவும் அதே வழியை இந்தியா பின் பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  அரசாங்கத்தின் பல்வேறு துறைகளையும் மத்திய அரசு அணி திரட்ட வேண்டும் என்றும் இந்த நேரத்தில் ராணுவத்தின் மூலம் நாம் என்ன உதவியை பெற முடியுமோ அதனை பெற வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

  இதேபோல், கொரோனா தொற்றில் இருந்து  வெற்றி பெற்றுவிட்டோம் என  இந்தியா  மிகவும்  முன்கூட்டியே  அறிவித்து விட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: