தனிமைப்படுத்திக் கொண்ட கமல்ஹாசன் குடும்பத்தினர்!

தனிமைப்படுத்திக் கொண்ட கமல்ஹாசன் குடும்பத்தினர்!
கமல்ஹாசன்
  • Share this:
தனது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க நோய்த்தொற்று உள்ளவர்களும், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக லண்டன் சென்று வந்த நடிகை ஸ்ருதிஹாசன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதேபோல் அவரது தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும், தந்தை கமல்ஹாசன், சகோதரி அக்‌ஷராஹாசன் ஆகியோர் சென்னையில் தனித்தனி வீட்டிலும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அனைவரும் தாங்கள் மேற்கொண்ட பயணங்களின் அடிப்படையில் இம்முடிவை எடுத்திருப்பதாகவும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.


இது கடினமாக இருந்தாலும் மக்கள் இதை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கும் ஸ்ருதிஹாசன், தன்னுடன் உதவியாளர்கள் யாரும் இல்லை என்றும், தான் வளர்க்கும் பூனை கிளாரா மட்டுமே தம்முடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்