மேஜிக் கலைஞராக மாறிய ஷ்ரேயாஸ் ஐயர் - வீடியோ

மேஜிக் கலைஞராக மாறிய ஷ்ரேயாஸ் ஐயர் - வீடியோ
  • Share this:
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இளம் பெண் ஒருவரிடம் மேஜிக் செய்து காட்டும் வீடியோவை பிசிசிஐ பகிர்ந்து உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் கூட்டமாக ஒன்றுக் கூட வேண்டாமென்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் வீடுகளை வெளியே செல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு வருகின்றனர்.

கொரோனா அச்சம் காரணமாக ஐ.பி.எல் தொடரும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வில் உள்ளனர். ஓய்வில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் வீட்டில் இருந்தாவாறே தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

ஷ்ரோயாஸ் ஐயர் வீட்டில் இருந்து கொண்டே மேஜிக் செய்து காட்டி மகிழும் வீடியோவை பிசிசிஐ பதிவு செய்துள்ளது. 91 வினாடிகள் இருக்கும் அந்த வீடியோவில் ஷ்ரேயாஸ் ஐயர் பெண் ஒருவருக்கு சீட்டுக்கட்டை வைத்து தந்திரமாக மேஜிக் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளது. வீட்டில் இருந்தப்படியே மேஜிக் செய்து மகிழும் அவருக்கு பிசிசிஐ நன்றி தெரிவித்துள்ளது.

First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்