அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் 24 மணிநேரமும் திறக்க அனுமதி... டெல்லி ஆளுநர்

அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் 24 மணிநேரமும் திறக்க அனுமதி... டெல்லி ஆளுநர்
டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்
  • Share this:
டெல்லியில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், 24 மணிநேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்தார்.

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அனில் பைஜால், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைளை 24 மணிநேரமும் திறந்திருக்க அனுமதிப்பதன் மூலம், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும் என்றார்.

வீடுகளுக்கு சென்று உணவு பொருட்கள் விநியோகிக்கும் சேவைக்கும் தடையில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். கொரோனா நோயாளிகளுடன் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் கெஜ்ரிவால் கூறினார்.


Also see...
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்