ஞாயிறு முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி - தமிழக அரசு

ஞாயிறு முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி - தமிழக அரசு
மாதிரிப்படம்
  • Share this:
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஞாயிறு முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த நோய் சமூக பரவலாக மாறுவதை தடுக்கும் பொருட்டு சமூக விலகலை கடைபிடிக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.


இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு தரப்பினர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நேற்று நடைபெற்ற மத தலைவரக்ளுடனான ஆலோசனை கூட்டத்தில் அரசோடு இணைந்து ஒத்துழைப்பு நல்க முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அதேசமயம், மக்கள் நடமாட்டதை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் குறைத்து, மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading