• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • இந்தியாவை அதிர வைத்த ஜூன் 12... கொரோனா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இந்தியாவை அதிர வைத்த ஜூன் 12... கொரோனா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

கோப்புப்படம்

கோப்புப்படம்

கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் ஜூன் 12ம் தேதி முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

  • Share this:
    இந்தியாவில் ஜூன் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான கொரோனா தகவல்கள் மிகுந்த அச்சம் ஊட்டக்கூடியவையாக உள்ளன. ஜூன் 12ல் தான் இந்தியா 3 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்தது.

    அதேதேதியில் தான் மகாராஷ்டிரா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டியது. டெல்லி ஒரே நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளையும், உத்தர பிரதேசம் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் ஜூன் 12ஆம் தேதி சந்தித்தது. அந்த தேதியில் தான் பீகார் மாநில பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது.

    இதையெல்லாம் விட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பனிபடர்ந்த இமயமலையில் அமைந்துள்ள லடாக் மற்றும் சிக்கிமில் இருந்து வந்துள்ளன.

    அதுவரை லடாக்கில் 135 தொற்றுகளும், சிக்கிமில் 13 தொற்றுகளும் மட்டுமே பதிவாகியிருந்தன. ஜூன் 12ஆம் தேதி ஒரே நாளில் லடாக்கில் அதிர்ச்சியளிக்கும் வகையில் 104 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன. சிக்கிமிலும் 36 தொற்றுகள் புதிதாக உறுதி செய்யப்பட்டன.

    மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பே, லடாக்கில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு விட்டது.

    அது படிப்படியாக 43 ஆக அதிகரித்து, 43 பேரும் குணமாகி வீடு திரும்பியதை அடுத்து, கொரோனா இல்லாத பகுதியாகவும் லடாக் அறிவிக்கப்பட்டது. ஆனால் மே மாதம் இறுதி வாரத்தில் மீண்டும் கொரோனாவின் ஆட்டம் லடாக்கில் தொடங்கியது.

    தினந்தோறும் சிறிது சிறிதாக அதிகரித்து வந்த தொற்று, ஜூன் 12ஆம் தேதி ஒரே நாளில் 104 பேருக்கு கண்டறியப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    மே 23ஆம் தேதி வரை கொரோனா இல்லாத மாநிலமாகவே சிக்கிம் இருந்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் தாக்கிய கொரோனா இறுதியாக சிக்கிமை சென்றடைந்தது.

    மே 23ஆம் தேதி தான் சிக்கிமில் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அடுத்த 10 நாட்களுக்கு பிறகே 2வது தொற்று கண்டறியப்பட்டது.

    இந்நிலையில் தான் கடந்த ஜூன் 12 ஆம் தேதியன்று ஒரே நாளில் 36 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன. இவர்களில் 34 பேர் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய தொழிலாளிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை அசாம் மற்றும் திரிபுராவில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பு இருந்து வந்த நிலையில், கடந்த இருவாரங்களில் மணிப்பூர், நாகாலாந்து, மிசோராம், மேகாலாயா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமே எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டாலும், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    Also read... கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: