கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்த நடிகை!

நடிகை ஷிகா மல்ஹோத்ரா

 • Share this:
  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நர்ஸிங் பணியை கையிலெடுத்துள்ளார் நடிகை ஷிகா மல்ஹோத்ரா.

  பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா சஞ்சய் மிஷ்ராவுடன் இணைந்து காஞ்ச்லி என்ற படத்தில் நடித்துள்ளார். அதற்கு முன்பாக டெல்லி வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்ர்தார்ஜுங் மருத்துவமனையில் 5 ஆண்டுகளாக செவிலியர் பட்டப்படிப்பு படித்துள்ளார். நடிப்புத் துறைக்கு வந்த பின்னர் நர்ஸாக பணியாற்றாமல் இருந்த சிகா, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் தன்னார்வலராக இணைந்து செவிலியர் பணி செய்து வருகிறார்.

  இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர், செவிலியராகவும், நடிகையாகவும் நாட்டு மக்களுக்குச் சேவையாற்ற நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து அரசுக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

  கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகர்கள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சிகா மல்ஹோத்ரா களத்தில் இறங்கி பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
  மேலும் படிக்க: கொரோனா பாதிப்பு: பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி அளிப்பதாக அக்‌ஷய்குமார் உறுதி!  Published by:Sheik Hanifah
  First published: