கொரோனா எதிரொலி... பூனை, நாய் இறைச்சிக்கு தடை விதித்த முதல் சீன நகரம்...!

கொரோனா எதிரொலி... பூனை, நாய் இறைச்சிக்கு தடை விதித்த முதல் சீன நகரம்...!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: April 2, 2020, 5:19 PM IST
  • Share this:
சீனாவின் சென்ஷேன் மாகாணத்தில் பூனை மற்றும் நாயைச் சாப்பிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஊஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 47,249 பேர் இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் எப்படி மனிதர்களுக்கு பரவியது என்று நடத்தப்பட்ட ஆய்வில், வளர்ப்புப் பிராணிகள் சந்தை ஒன்றில் இருந்து கோவிட் 19 வைரஸ் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, எறும்பு திண்ணி என்ற உயிரினத்தில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது.


எறும்புத்திண்ணிக்கு சீனாவில் நல்ல சந்தை மதிப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, வளர்ப்பு பிராணிகள் பட்டியலில் உள்ள விலங்குகளை சமைத்து உண்ண கட்டுப்பாடுகள் கொண்டுவர சென்ஷேன் நகர நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன் முதல்படியாக, பூனை மற்றும் நாயை சமைத்து உண்ண மே மாதம் முதல் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்ஷேன் மாகாண அரசு வெளியிட்டுள்ள தகவலில், ‘நாய் மற்றும் பூனை ஆகிய இரண்டும்தான் மற்ற விலங்குகளை விட மனிதனிடம் நெருக்கமாகப் பழகுகின்றன. எனவே அதன்மூலம் நோய் பரவலைத் தடுக்க இந்தத் தடை அவசியமாகிறது. அத்துடன் மனிதப் பண்பாடு குறித்த கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக இத்தடை அமைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஊஹான் போன்ற பல நகரங்களில் வவ்வால் உள்ளிட்ட உயிரினங்களை விற்கும் சந்தைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading