வைரஸ் மரபியல் கூட்டமைப்பின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ஷாகித் ஜமீல் திடீர் ராஜினாமா

டாக்டர் ஷாகித் ஜமீல்.

இந்திய SARS-COV-2 மரபியல் ஆய்வு கூட்டமைப்பின் (Insacog) ஆலோசனைக் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து முக்கிய வைரஸ் ஆய்வாளரான டாக்டர் ஷாகித் ஜமீல் விலகினார்.

 • Share this:
  இந்திய SARS-COV-2 மரபியல் ஆய்வு கூட்டமைப்பின் (Insacog) ஆலோசனைக் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து முக்கிய வைரஸ் ஆய்வாளரான டாக்டர் ஷாகித் ஜமீல் விலகினார்.

  ஆனால் இவர் ஏன் திடீரென விலகினார் என்பதற்கான காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை. இந்திய சார்ஸ் கோவிட் மரபியல் ஆய்வுக் கூட்டமைப்பில் மொத்தம் நாடு முழுதும் 10 சோதனை நிலையங்கள் உள்ளன. இந்தக் குழு கொரோனாவின் பரிமாணம் அடையும் உருமாறும் வைரஸ் வகைகளை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

  இந்நிலையில் காரணம் கூறாமல் இவர் ராஜினாமா செய்தது பற்றி ஆங்கில ஊடகம் ஒன்று மற்ற ஆய்வாளர்களிடம் கேட்டறிந்த விஷயம் என்னவெனில் ‘அரசின் அழுத்தம்’ காரணமாக இருக்கலாம் என்றனர்.

  டாக்டர் ஜமீல் அரசு இந்த பெருந்தொற்றை கையாளும் விதம் குறித்து விமர்சனக்கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வந்தார்.

  மே 13ம் தேதியன்று நியூயார்க் டைம்ஸில் இந்தியாவின் பலதரப்பட்ட கொரோனா அலைகள் பற்றியும் அதை அரசு கையாளும் விதம் பற்றியும் பேசியிருந்தார். அதில் சமமற்ற முறையில் வாக்சின் போடப்படுகிறது என்று இந்திய அரசின் கொள்கைகளையும் விமர்சித்திருந்தார். மேலும் நியூயார்க் டைம்ஸில் டாக்டர் ஜமீல் கூறும்போது, “ஆதாரங்கள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தில் விஞ்ஞானிகள் பல அழுத்தங்களைச் சந்திக்கின்றனர்.

  ஏப்ரல் 30 தேதி சுமார் 800 விஞ்ஞானிகள் பிரதமர் மோடியிடம் ஆய்வுக்காக தரவுகளை தங்களுக்கு அளிக்க வேண்டும் இதன் மூலம் மட்டுமே பரவி வரும் உருமாற்ற வைரஸ்களை ஆய்வு செய்ய முடியும் என்று கேட்டனர். தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது என்பது பெரிய அளவில் அடிவாங்கியுள்ளது. இந்தியாவில் பெருகி வரும் தொற்றினால் இழக்கும் உயிர்கள் நிரந்தர வடுவாக மாறும்” என்று கூறியிருந்தார் டாக்டர் ஜமீல்.

  மார்ச் மாதம் முதல் இந்திய கோவிட் மரபியல் ஆய்வுக்கூட்டமைப்பு வைரஸ் சாம்பிள்களை நாடு முழுவதிலிருந்தும் பெற்று தொடர் வரிசைப்படுத்தல் செய்தது. அச்சுறுத்தும் அயல்நாட்டு வைரஸ் உருமாறிகள் மற்றும் இந்தியாவில் பரவும் பி.1.617 உருமாறிய வைரஸையும் கண்டுப்பிடித்தனர். இதுதான் இந்தியாவை ஆட்டம் காணவைக்கும் 2ம் அலைக்குக் காரணம்.

  இந்நிலையில் டாக்டர் ஜமீல் ராஜினாமா செய்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: