தந்தைக்காக ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட பெண்ணை உடலுறவுக்கு அழைத்த நபர் - நெட்டிசன்கள் ஆவேசம்!

ஆக்சிஜன் சிலிண்டர். மாதிரிப்படம்.

இந்த இக்கட்டான சூழலில், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் வழங்க பெண் ஒருவரிடம் பாலியல் உறவு வைத்து கொள்ள ஒரு நபர் கோரியுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
கொரோனா இராண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்கள் திணறி வருகின்றன. பாதிக்கப்படும் நோயாளிகளை அட்மிட் செய்து சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமலும், உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமலும் சுகாதாரத்துறையின் கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது.

முக்கியமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்து பலர் உயிரிழக்க காரணமாக உள்ளது. பல நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களை தேடி அலைந்து திரிவது காண்போரை கவலையடைய செய்துள்ளது.

டிமாண்ட் அதிகரித்ததன் காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைப்பதும், கள்ள சந்தையில் அதிக கட்டணம் வசூலித்து ஆக்ஸிஜன் விற்பதும் டெல்லி போன்ற பல நகரங்களில் அரங்கேறி வருகிறது. நாடு இருக்கும் இந்த இக்கட்டான சூழலில், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் வழங்க பெண் ஒருவரிடம் பாலியல் உறவு வைத்து கொள்ள ஒரு நபர் கோரியுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் யூஸர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ள தகவல் நெட்டிசன்களை ஆவேசம் கொள்ள செய்துள்ளது.

ALSO READ : செல்பி பதிவேற்றியது குத்தமா? மனோபாலாவை பதற வைத்த நெட்டிசன்ஸ்!

சமீபத்தில் நிகழ்ந்த இந்த கொடூரம் குறித்து டெல்லியை சேர்ந்த ட்விட்டர் யூஸர் ஒருவர் வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அந்த யூசர் பதிவிட்டுள்ள போஸ்டில், " எனக்கு தெரிந்த எனது இளைய சகோதரி போன்ற பெண் ஒருவர், உயிருக்கு போராடிய அவரது தந்தையின் ஆக்சிஜன் தேவைக்காக அலைந்த போது, ஆக்ஸிஜன் தருகிறேன் பதிலுக்கு என்னுடன் நீ உடலுறவு வைத்து கொள்ள வேண்டும் என்று ஒருவன் கேட்டுள்ளான்"என்ற அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து பதிவிட்டுள்ள அந்த யூஸர், "எலைட் காலனி ஒன்றில் வசிக்கும் எனக்கு இளைய சகோதரி போன்ற எனது நண்பரின் சகோதரியின் தந்தைக்கு அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்பட்டிருக்கிறது. ஆக்சிஜன் தேவையை தனது காம இச்சைக்காக அவளது அண்டை வீட்டு நபர் பயன்படுத்த நினைத்து, என்னிடம் ஆக்சிஜன்சிலிண்டர் இருக்கிறது. அது உனக்கு வேண்டுமானால் என்னோடு நீ உடலுறவு வைத்து கொள்ள வேண்டும் என கேட்டுள்ளார்" என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க முடியும்..? என்று நெட்டிசன்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

  

இந்த பதிவை கண்டு அதிர்ந்த நெட்டிசன்கள் பாதிக்கப்பட்டவரை போலீசில் புகார் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். வேறு சில யூஸர்கள் நெருக்கடியான சூழலை பயன்படுத்தி தவறு செய்ய முனைந்த நபரை, காலனியின் குடியுரிமை நலச்சங்கத்தில் புகார் செய்ய சொல்லியுள்ளனர்.

ALSO READ : தள்ளுவண்டியில் முட்டை திருடிய தலைமை காவலர்..வீடியோ வைரலான நிலையில் சஸ்பெண்ட்

மேலும் சிலர் மைக்ரோ பிளாகிங் தளங்களில் அந்த நபரின் பெயர் மற்றும் தகவல்களை வெளிப்படுத்தி அவனது முகத்திரையை கிழிக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். இது தொற்றுநோய்க்கு மத்தியில் நடந்த முதல் சம்பவம் அல்ல. கடந்த ஏப்ரல் 14 ம் தேதி, அந்தேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட கோவிட் -19 நோயாளியிடம் அத்துமீறியதாக ஒரு மருத்துவ ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டார்.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: