• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் குடிசைப் பகுதிகளில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி

சென்னையில் குடிசைப் பகுதிகளில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி

காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் இரண்டும் மூக்கு மற்றும் வாயிலிருந்து வரும் நீர்த்துளிகள் வழியாக பரவுகின்றன. மக்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து கொள்வதற்கு முன்பு இவை இரண்டுமே பரவலாம், காய்ச்சல் தொற்றுநோய்க்குப் பிறகு ஒரு குறுகிய காலத்தைக் கொண்டுள்ளது. காய்ச்சல் என்பது கொரோனா வைரஸுடன் ஒப்பிடும்போது ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை சோர்வாக உணர முடியும், இதுவே கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் இரண்டு வாரம் முதல் 14 நாட்கள் வரை சோர்வாக உணரமுடியும்.

காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் இரண்டும் மூக்கு மற்றும் வாயிலிருந்து வரும் நீர்த்துளிகள் வழியாக பரவுகின்றன. மக்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து கொள்வதற்கு முன்பு இவை இரண்டுமே பரவலாம், காய்ச்சல் தொற்றுநோய்க்குப் பிறகு ஒரு குறுகிய காலத்தைக் கொண்டுள்ளது. காய்ச்சல் என்பது கொரோனா வைரஸுடன் ஒப்பிடும்போது ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை சோர்வாக உணர முடியும், இதுவே கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் இரண்டு வாரம் முதல் 14 நாட்கள் வரை சோர்வாக உணரமுடியும்.

சென்னையில் குடிசை பகுதிகளில் வாழும் மக்களிடையே கொரோனா பரவலை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னையில் குடிசை பகுதிகளில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில், நோய்த் தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளில் உள்ள ஏழைகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும், கொரோனா நோய்த் தொற்றுடன் ரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, புற்று நோய் போன்ற நோய் உள்ளவர்கள் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

    இப்பகுதியில் வாழும் ஏழைகளின் வாழ்விடங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில் அமைந்துள்ளன. எனவே, ஒரு முக்கிய நோய் பரவல் தடுப்புப் பணியாக சென்னை மாநகராட்சியில், குறிப்பாக நெரிசலான குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக வீடுகள் தோறும் தீவிர ஆய்வு செய்து கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களில் குறைந்தபட்சம் 7 நாட்களாவது தங்க வைத்து, அவர்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற ஒரு முக்கிய நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.

    இதனால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய்ப் பரவல் தடுக்கப்படும்.  அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்படும் போது, அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பும்போது தலா 1,000 ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு தனது அறிக்கையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    Also see...

    PM Modi Speech Live | 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: