கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் விலை, அரசு மருத்துவமனைகளில் ஒரு டோஸ் தடுப்பூசி 400 ரூபாய் என விலை அதிகரித்திருப்பதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, அரசு மருத்துவமனைகளில் ஒரு டோஸ் தடுப்பூசி 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் வழங்கப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில்தான் குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி கிடைக்கிறது என பிரதமர்
நரேந்திர மோடி கூறினார்.
இந்நிலையில்,
கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொள்ள அதிக அளவில் பொதுமக்கள் முன்வருகின்றனர். சில இடங்களில்
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
Must Read : இந்தியா ஆக்சிஜன் இல்லாமல் மூச்சுத் திணறுகிறது: ராகுல் காந்தி சாடல்
இதற்கிடையில், சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலங்களுக்கு ஒரு டோஸ் விலை 400 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு மட்டும் ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.