இரு மாத கொரோனா ஊரடங்கிற்குப் பின் பின்பு செர்பியா நாட்டில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர் செர்பியா நிறுவனத்தின் முதல் விமானம் பெல்கிரேடில் இருந்து சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சிற்கு சென்றது.
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் முகக்கவசம், கையுறை போன்று நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கான எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பயணம் செய்தனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்றும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னரே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட செர்பியாவில் 10,833 பேருக்கு கொரோனா உள்ளது. இதில் 235 பேர் இதுவரை உயிரிழந்தனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.