• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் மருத்துவர்களுக்கு சிகிச்சை வழங்க தனி வார்டு

சென்னையில் மருத்துவர்களுக்கு சிகிச்சை வழங்க தனி வார்டு

கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அயனாவரம் இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா நோயால் பாதிக்கப்படும் மருத்துவ ஊழியர்களுக்கு தனி வார்டு அமைத்து சிகிச்சை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சங்கம், கருப்புபட்டை அணியும் போராட்டம் அறிவித்திருந்தது.

    இந்தநிலையில், இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவில், கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு, அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மேல் தளத்தில் தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக நூறு படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாதவர்கள் அல்லது லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா கல்லூரியானது தனிமைப்படுத்தும் மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...

    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் ஆறுதல் தரும் ஒரு செய்தி

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: