Home /News /coronavirus-latest-news /

7 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை வீழ்ச்சி: ஏன்..?

7 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை வீழ்ச்சி: ஏன்..?

கோப்புப் படம்

கோப்புப் படம்

கடந்த 7 மாதங்களில் 10,700 புள்ளிகளுக்கு கீழ் நிப்டி செல்வது இதுவே முதல்முறையாகும்.

  • News18
  • Last Updated :
    கொரோனா தாக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகிய காரணங்களால் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.

    வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடனேயே தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஆயிரத்து 400 புள்ளிகள் வரை சரிந்து 36,067 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெறுகிறது.

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 405 புள்ளிகள் சரிந்து 10,538 புள்ளிகளாக இருந்தது. கடந்த 7 மாதங்களில் 10,700 புள்ளிகளுக்கு கீழ் நிப்டி செல்வது இதுவே முதல்முறையாகும்.

    இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 188 நிறுவனங்களில் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது. 520 நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிந்துள்ளது. 69 நிறுவன பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை.

    யெஸ் வங்கிக்கு எஸ்.பி.ஐ. வங்கி உதவிக்கரம் நீட்டியதன் எதிரொலியாக யெஸ் வங்கியின் பங்கு மதிப்பு 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் எஸ்.பி.ஐ. வங்கியின் பங்கு மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. கொரோனா தாக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு ஆகியவையே பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CoronaVirus, Crude oil, Mumbai sharemarket, Share Market

    அடுத்த செய்தி