• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கள்ளச்சாராயம் வந்துவிடக்கூடாது என்பதால் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜு

கள்ளச்சாராயம் வந்துவிடக்கூடாது என்பதால் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜு

அமைச்சர் செல்லூர் ராஜு.

அமைச்சர் செல்லூர் ராஜு.

"கட்டுப்பாடுகளின் அடிப்படையில் டாஸ்மாக் விற்பனையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது"

  • Share this:
தமிழகத்தில் டாஸ்மாக் கடையைத் திறக்காமல் இருப்பது கற்புடைய பெண்ணை கற்பூர வளையத்தின் நடுவே அமர வைப்பதைப் போன்றது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை கரிசல் குளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்பு அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறிதாவது, கற்புடைய பெண்ணை கற்பூரம் சுற்றிய வளையத்தின் நடுவே அமர வைப்பது போன்றதுதான், நம்மைச் சுற்றியுள்ள மாநிலங்களில் மதுக்கடையைத் திறந்த பின்பு இங்கு இருப்பவர்கள் அங்கு சென்று வரிசையில் நிற்கிறார்கள் என்று சொல்வது என்றார்.

கள்ளச்சாராயம் வந்துவிடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடையைத் திறக்க முதல்வர் முடிவு செய்தார் என்றும் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் டாஸ்மாக் விற்பனையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: