கூட்டத்தைக் கூட்டி வாளுடன் எச்சரிக்கை விடுத்த பெண் சாமியார்... போலீசார் காட்டிய அதிரடி...! - வீடியோ

கூட்டத்தைக் கூட்டி வாளுடன் எச்சரிக்கை விடுத்த பெண் சாமியார்... போலீசார் காட்டிய அதிரடி...! - வீடியோ
  • News18
  • Last Updated: March 25, 2020, 4:25 PM IST
  • Share this:
கொரோனா தடுப்பு முயற்சியாக 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பெண் சாமியார் ஒருவர் ஆன்மீக நிகழ்ச்சி நடத்தி போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை 564 பேர் இந்தியாவில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், 10 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் தவிர்த்து பிற கடைகள் திறக்கப்படவில்லை.


தேவையற்ற காரணத்திற்காக வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். திறந்திருக்கும் கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்மீக தலங்களில் மக்கள் கூடவோ, நிகழ்ச்சிகள் நடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் தியோரியா பகுதியில் ஆசிரம் ஒன்று நடத்தி வரும் பெண் சாமியார் ‘மா ஆதி சக்தி’, இன்று காலை தனது வீட்டில் பக்தர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டார். 50-க்கும் மேற்பட்டோர் அங்கிருப்பது தெரிய வந்த போலீசார், அங்கு சென்று அனைவரையும் கலைந்து போகச் சொல்லி எச்சரித்தனர். ஆனால், பெண் சாமியார் வீட்டில் இருந்து வாளுடன் வெளியே வந்து போலீசாருக்கு பதில் எச்சரிக்கை கொடுத்தார்.இதனை அடுத்து, அதிரடியாக தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும், பெண் சாமியாரை கைது செய்து ஆசிரமத்திற்கும் சீல் வைத்தனர்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்