சென்னையில் இரண்டாவது முறை கொரோனா பாதிப்பு - மாநகராட்சி ஆணையர் விளக்கம்

சென்னையில் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இரண்டாவது முறை கொரோனா பாதிப்பு - மாநகராட்சி ஆணையர் விளக்கம்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
  • Share this:
சென்னையில் உள்ள சந்தைகளில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகள், வருவாய் துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பிரகாஷ் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் பேட்டியளித்த அவர்,  சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் அதிகளவில் கூடும் சந்தைகள், வங்கிகள், நியாயவிலை கடைகளில் கூட்டத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சென்னையில் உள்ள 81 சந்தைகளை தனிதனியாக கண்காணிக்க நிர்வாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுக்கள் தினந்தோறும் சந்தைகளை ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார்.


மேலும், சந்தைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் சீல் வைக்கப்படும் என எச்சரித்த அவர், இரண்டு நாட்களுக்குள் அனைத்து சந்தைகளிலும் சிசிடிவி பொருத்தப்படும் என தெரிவித்தார்.

Also read... எவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும்...? நேர வழிகாட்டுதல் வெளியீடு

கோயம்பேடு சந்தையை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளிடையே ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், தற்காலிக சந்தைகளை சூழ்நிலைக்கு ஏற்ப பழைய இடத்திற்கு மாற்றம் நடவடிக்கை தொடங்கியிருப்பதாக தெரிவித்தார்.சென்னையில் இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவு என்றும் இதுவரை இரண்டு பேர் தான் இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading