ஊரடங்கு இரண்டாம் நாள்: அத்தியாவசியப் பொருள்களை வாங்க குவியும் மக்கள்!

கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இரண்டாம் நாளை எட்டியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் வாகனங்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

ஊரடங்கு இரண்டாம் நாள்: அத்தியாவசியப் பொருள்களை வாங்க குவியும் மக்கள்!
தடையை மீறி காய்கறி சந்தை
  • Share this:
கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இரண்டாம் நாளை எட்டியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் வாகனங்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையில் கடந்த இரு தினங்களாக காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி, ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இது ஊரடங்கு விதிகளுக்கு எதிரானது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால் இன்று போதிய இடைவெளி விட்டு உழவர் சந்தையில் கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. மூன்று மூன்று பேராக மட்டுமே போலீசார் உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும் உள்ளே நுழைவதற்கு முன்பாக கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளனர்.

Also see... இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்