கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை நமது விஞ்ஞானிகள் மீட்பார்கள் - பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை விஞ்ஞானிகள் மீட்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை நமது விஞ்ஞானிகள் மீட்பார்கள் - பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 2:20 PM IST
  • Share this:
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், சிரமமான காலகட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், கொரோனாவா, கடமையா என்ற நிலையில் அனைத்து எம்பிக்களும் கடமையைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறிய அவர், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி உலகின் எந்த மூலையிலாவது விரைவாக உருவாக்கப்படுவது அவசியம் என்றார்.



கொரோனா நெருக்கடியில் இருந்து மக்களை நமது விஞ்ஞானிகள் மீட்டெடுப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நமது ராணுவ வீரர்களுக்கு ஒட்டுமொத்த நாடே துணை நிற்பதை எம்பிக்கள் ஒருமித்த குரலில் வெளிப்படுத்துவார்கள் என நம்புவதாகவும் கூறினார்.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading