ஹோம் /நியூஸ் /கொரோனா /

‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்’: கொரோனாவுக்குப் பிறகு யாரை நம்புவது?- உலக சர்வே

‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்’: கொரோனாவுக்குப் பிறகு யாரை நம்புவது?- உலக சர்வே

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம் என்ற ஒரு பழைய பாடல் உண்டு. இப்போது கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு மக்கள் யாரைத்தான் நம்புவதோ என்று அல்லாடிப்போயுள்ளனர். அரசியல்வாதியையா? மருத்துவர்களையா? விஞ்ஞானிகளையா? யாரைத்தான் நம்புவது? இதற்கான விடையாக உலக அளவில் மக்களிடம் சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம் என்ற ஒரு பழைய பாடல் உண்டு. இப்போது கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு மக்கள் யாரைத்தான் நம்புவதோ என்று அல்லாடிப்போயுள்ளனர். அரசியல்வாதியையா? மருத்துவர்களையா? விஞ்ஞானிகளையா? யாரைத்தான் நம்புவது? இதற்கான விடையாக உலக அளவில் மக்களிடம் சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வேயில் பதிலளித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மருத்துவர்கள் நம்பத்தகுந்தவர்கள் என்று மருத்துவர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். Ipsos Global Trustworthiness Index 2021 என்ற சர்வேதான் இது. 61% மக்கள் விஞ்ஞானிகளை நம்பலாம் என்று கருதியுள்ளனர். அடுத்ததாக 55% மக்கள் ஆசிரியர்களை நம்பலாம் என்று வாக்களித்துள்ளனர்.

மாறாக அரசியல்வாதிகளா அய்யய்யோ என்று தெறித்து பலர் ஓடினாலும் 10% மக்கள் அரசியல்வாதிகளை நம்பலாம் என்று கூறியுள்ளனர். 14% மக்கள் அமைச்சர்களை நம்பலாம் என்றும் 15% மக்கள் விளம்பர அதிகாரிகளை நம்பலாம் என்றும் கருத்துக் கூறியுள்ளனர். மொத்தமாக இந்த சர்வேயில் 2019 முதல் டாக்டர்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. ஆனால் இது வெளிநாடுகளில்.. இந்தியாவில் மருத்துவர்கள் மீதான நம்பிக்கை குறித்து இந்த சர்வேயில் உள்ளதா என்று தெரியவில்லை.

உதாரணமாக, பிரிட்டனில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டவர்களில் 72% மக்கள் டாக்டர்கள் பக்கம் சாய்ந்துள்ளனர். கனடா, ஹாலந்து போன்ற நாடுகளிலும் மருத்துவர்களை மக்கள் இந்த கொரோனா காலக்கட்டத்தில் நம்பகத்தன்மையானவர்கள் என்று கூறியுள்ளனர்.

ஹங்கேரி, சிலி, சவுதி அரேபியா, போலந்து, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட சில சொற்ப நாடுகளில் மருத்துவர்களை நம்பலாம் என்று சாதகமாக மக்கள் வாக்களித்துள்ளனர். மெக்சிகோவில் மட்டும்தான் மருத்துவர்கள் மீதான நம்பிக்கை 71%லிருந்து 66% ஆகக்குறைந்துள்ளது.

இந்த இப்சோஸ் சர்வே ஆன்லைனில் ஏப்ரல் 23 முதல் மே, 7, 2021 வரை நடத்தப்பட்டது. 28 நாடுகளிலிருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தக் கருத்துக் கணிப்பில் கேள்விகளுக்கு பதில அளித்துள்ளனர்.

ஏன் இந்த சர்வே என்றால், உலகம் முழுதும் கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியாத நிலையில் வாக்சின் பற்றி, கொரோனா பற்றி, சிம்ப்டம் பற்றி, இன்னும் என்னவெல்லாமோ பற்றி போலித்தகவல்கள் உலவி வந்தன, நாட்டுத்தலைவர்கள் உட்பட யாரை நம்புவது என்ற பெருங்கேள்வி மக்களிடத்தில் இருந்தது. இதனையடுத்து இந்த சர்வே நடத்தப்பட்டதாக இப்சாஸ் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Corona, Covid-19