புதிய வகை கொரோனா வைரஸால் மேலும் ஆபத்தா? விஞ்ஞானி விளக்கம்

இந்தியாவில் மட்டும் காணப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக அச்சமடைய தேவையில்லை என விஞ்ஞானி விளக்கமளித்துள்ளனர்.

புதிய வகை கொரோனா வைரஸால் மேலும் ஆபத்தா? விஞ்ஞானி விளக்கம்
(கோப்புப் படம்)
  • Share this:
உலகின் பல நாடுகளிலும் கொரோனா பெரும் தொற்று தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது. அந்த நாடுகளில் இருந்து வேறுபட்ட புதிய வைரஸ் கிளை இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கு விஞ்ஞானிகள் Ai3 என்று பெயரிட்டுள்ளனர்.

தமிழ்நாடு தெலங்கானா மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வகை வைரஸ் கிளை மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சில சுவாரசியமான தகவல்களும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கின்றன. சிங்கப்பூரில் இருந்து கடந்த மார்ச் 16-ம் தேதி இந்தியாவிற்கு வந்த ஒரிரு பயணிகள் மட்டுமே இந்த வைரஸ் கிளையினை கொண்டு வந்திருக்கிறார்கள்.


அதில் ஒரு இளைஞர் தெலங்கானாவில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கிறார். அவர் மூலம் நோய் பாதிப்பு பெற்றவர்கள் அடுத்தடுத்து பலருக்கு தொற்றினை உருவாக்கியிருக்கிறார்கள்.

இது நாள் வரையில் அதிக பாதிப்புகளை கொண்ட மூன்று மாநிலங்களில் சரி பாதிக்கும் மேலானவர்கள் இந்த தொற்று பாதிப்பினால் தான் நோய் பெற்றார்கள் என்கிற தகவல் விஞ்ஞானிகளின் ஆய்வில் அறிய வந்துள்ளோம்.

இந்த Ai3 கிளை வைரஸ் மற்ற கிளை வைரஸ்களை விட எந்த வகையிலும் வீரியமானது அல்ல. இந்த வகை வைரஸ் தொற்று ஏற்பட்டவருக்கும் மற்ற கிளை வகைகளின் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டவருக்கும்  நோய் பாதிப்புகளில் எந்த வித்தியாசமும் தென்படவில்லை என்று விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் விளக்கியுள்ளார்.எந்த வைரஸும் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் அடையும். அதே போன்று தான் கொரோனா வைரஸ் மாற்றம் அடைந்து வருகிறது. ஆனால் இது வரை கண்டறியப்பட்டுள்ள மாற்றங்கள் உருமாற்றம் மட்டுமே. எனவே நோய் பாதிப்பு, கொரோனாவுக்கான சிகிச்சை, கொரோனா தடுப்பு மருந்து ஆகியவற்றில் எந்த மாற்றமும் இதனால் ஏற்படவில்லை எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.

Also read... உடல் வெப்பநிலை பரிசோதனையில் இருந்து தப்பிக்க ’பாராசிட்டமல்’ மாத்திரை - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கைAlso see...
First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading