HOME»NEWS»CORONAVIRUS-LATEST-NEWS»schools using masks social distancing dont see rapid spread of covid 19 new study aru ghta

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பள்ளிகளில் கொரோனா பரவல் இல்லை - ஆய்வில் தகவல்!

2021 - 22ம் ஆண்டில் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பள்ளிகளில் கொரோனா பரவல் இல்லை - ஆய்வில் தகவல்!
பள்ளிகள் திறப்பு
  • Share this:

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதால் பள்ளிகளில் கொரோனா வைரஸின் பரவல் இல்லை, ஆனால் உள்ளரங்க விளையாட்டு நடவடிக்கைகள் தவிர்க்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கி ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், தற்போது கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகின் பல பகுதிகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அமெரிக்கா, இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, இதனால் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதற்கான ஆதாரங்களும் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி) ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பள்ளி திறப்பு குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பள்ளிகள் திறப்பு கொரோனா தொற்று சமூக பரவலுக்கு காரணம் என்ற ஆதாரங்கள் இதுவரை இல்லை என அமெரிக்க மருத்துவ சங்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



அதே நேரத்தில் பள்ளிகளில் சமூக இடைவெளி, முக கவசம் அணிவது, தொடுதல் இல்லாத வருகை பதிவேடு ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் பள்ளி அறைகள் காற்றோட்டம் நிறைந்த பகுதியாக இருக்க வேண்டும், அறிகுறியற்ற கொரோனா பரவலை கண்டறியும் வகையில் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும், மற்றும் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால் அவர்களை தனிமைப்படுத்த தேவையான வசதிகளை செய்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இவைகள் எல்லாம் செய்துவைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்துகொள்ள மிசிசிப்பியில் உள்ள அமெரிக்க பள்ளிகள், வட கரோலினா, விஸ்கான்சின் மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகளின் பள்ளிகளுக்கும் சென்று ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்துள்ளனர். அதனடிப்படையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழல் இருக்கிறது என்பதில் அதிக நம்பிக்கை உள்ளது என்றும், 2021 - 22ம் ஆண்டில் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Published by:Arun
First published: