கொரோனா பரவல் : காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகளை மூட அம்மாநில ஆளுநர் மனோஜ் சின்கா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகளை மூட அம்மாநில ஆளுநர் மனோஜ் சின்கா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  காஷ்மீரில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, நோய் பரவலைக் கட்டுப்பட்டுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளை மூடுவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

  அதன்படி 9 ஆம் வகுப்புக்கான வகுப்புகள் 2 வாரங்களும், 10, 11, 12 ஆம் வகுப்புக்கான வகுப்புகள் ஒரு வாரத்துக்கும் மூடப்படும் என்று ஆளுநர் மனோஜ் சின்கா உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

  காஷ்மீரில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், பள்ளிகள் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என்று ஆளுநர் கூறியுள்ளார். அத்துடன் 200 பேர்களுக்கு அதிகமாக கூடும் சமூக நிகழ்வுகள், கூட்டங்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Must Read : தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல்

   

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால், பல்வேறு மாநிலங்கள் நோய் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிராவில் இரவு நேரம் மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: