ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் கொரோனா தொற்று பரவல் இருப்பதால், பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், கல்வி நிலையங்களை சார்ந்து இயங்கும் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புத்தக விற்பனையாளர்கள் 80 சதவிகித விற்பனையை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக மே மாதம் தொடங்கும் சீசன், ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் எனவும், இம்முறை ஆன்லைன் வகுப்புகள் என்பதால் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தக வியாபாரிகள் கூறுகின்றனர் .
இதேபோல் எப்போதும் ஏப்ரல் மாதங்களிலேயே களைகட்டும் பள்ளி சீருடைகளின் வியாபாரம், முழுதாய் தேங்கி உள்ளது. இந்த நஷ்டத்தில் இருந்து மீண்டு வர பல ஆண்டுகள் பிடிக்கும் என 52 ஆண்டுகளாக சீருடை விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தின் உரிமையாளரான மிதுன் கூறுகிறார்.
மேலும் படிக்க.. இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..
இதேபோல், ஸ்டேஷனரி கடைகள் உள்ளிட்ட சார்பு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போது இந்த நிலைமை மாறி, மீண்டும் பழையபடி வியாபாரம் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வியாபாரிகள் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறன்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, School books