• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • லாக்டவுனிலும் ஊழியர்களுக்கு முழு ஊதியம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

லாக்டவுனிலும் ஊழியர்களுக்கு முழு ஊதியம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

ஊரடங்கு காலத்திலும் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தையும் தர வேண்டுமென மத்திய அரசு பிறப்பித்த உத்தரவிற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

  • Share this:
    லாக்டவுன் காலத்தில் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்க கடந்த மார்ச் 29-ம் தேதி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஜூன் 12 வரை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்ட சூழலில் தனது அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற்றது.

    அதேசமயம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்தால் அதற்கான ஆவணங்களை நிறுவனங்கள் சமர்ப்பிக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

    இந்த வழக்கின் மீதான விசாரணை ஜூன் 4-இல் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் படிக்க...

    சென்னையில் ஊரடங்கு தீவிரமாகுமா? உயர்நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்கும் தமிழக அரசு..

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: