Home /News /coronavirus-latest-news /

விமான முன்பதிவு கட்டணத்தை திருப்பி வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

விமான முன்பதிவு கட்டணத்தை திருப்பி வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

விமான சேவை பாதிப்பு

விமான சேவை பாதிப்பு

உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த கேரளாவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் மத்திய அரசின் உத்தரவை விமான நிறுவனங்கள் மீறுவதாக வாதிட்டது.

    விமான முன்பதிவு கட்டணத்தை திருப்பி வழங்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஊரடங்கால் விமான பயணம் ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணங்களை மூன்று வாரத்துக்குள் முழுமையாக திருப்பி வழங்க மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டது.

    ஆனால், ஏர் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் கட்டணத்தை திருப்பி வழங்க மறுத்து, அதற்குப் பதில் அடுத்த ஒராண்டுக்குள் வேறு ஒரு தேதியில் பயணித்துக் கொள்ளலாம் என கூறியதாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த கேரளாவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் மத்திய அரசின் உத்தரவை விமான நிறுவனங்கள் மீறுவதாக வாதிட்டது.

    இதனை தொடர்ந்து விமான முன்பதிவுக் கட்டணம் தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Air India, CoronaVirus, Lockdown, Supreme court

    அடுத்த செய்தி