சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 22, 2020, 2:07 PM IST
  • Share this:
சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை - மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த மாதம் 19-ம் தேதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலர்களால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

இதனையடுத்து காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி ஸ்ரீதர் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரித்த சிபிஐ சாத்தாங்குளம் பகுதிக்கு அழைத்து வந்து காவல் நிலையம் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் காவலர்கள் செல்லத்துரை, சாமத்துனர, வெயிலு முத்து ஆகிய மூன்று பேரையும் விசாரணைக்கு எடுத்துள்ள சிபிஐ போலீசார், நேற்று சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்து வந்து நான்கரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.


இன்று மூவரையும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கும் நிலையில், சிபிஐ விசாரணை அதிகாரிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
படிக்க: வேண்டாம் N-95 முகக் கவசங்கள் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கைபடிக்க: கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா


படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்
இதனை அடுத்து, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தபடவுள்ளது. மேலும், விசாரணையை முடித்து இன்று மூவரையும் அவசர அவசரமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading