சாத்தான்குளம் வழக்கில் கைதாகி மதுரை சிறையில் உள்ள சிறப்பு எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா உறுதி

சாத்தான்குளம் வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ள எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சாத்தான்குளம் வழக்கில் கைதாகி மதுரை சிறையில் உள்ள சிறப்பு எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா உறுதி
எஸ்.எஸ்.ஐ பால்துரை (வட்டமிடப்பட்டவர்)
  • News18
  • Last Updated: July 24, 2020, 10:19 AM IST
  • Share this:
சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குழுவில் இடம்பெற்றுள்ள சார்பு ஆய்வாளர் சச்சின் மற்றும் தலைமைக் காவலர் சைலேந்திர குமார் ஆகிய இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று பவன், அஜய் என்ற இரண்டு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட இருக்கிறார். அவருடன் இருந்தவர்கள், அவரை அழைத்துச் சென்ற காவலர்கள் தனிமைப்படுத்தப்பட இருக்கின்றனர்.


இதற்கிடையே, இந்த வழக்கில் கைதாகியுள்ள சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தை, மகன் மரண வழக்கில் மூன்று காவலர்களை வியாழக்கிழமை வரை சிபிஐ காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியிருந்த நிலையில், புதன்கிழமையே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.


படிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்

படிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்

படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு
இதையடுத்து காவலர்கள் வெயில்முத்து, சாமதுரை மற்றும் செல்லத்துரை ஆகியோரை ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி ஹேமா நந்தகுமார் உத்தரவிட்டார்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading