கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக விக்டோரிய மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா இந்த மாதம் 27 விடுதலையாக உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சசிகலாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்ட சசிகலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியான அறிக்கையின் படி சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்று அறிகுறி குறைந்து வருகிறது என்றும் உடல்நிலை, ஆக்ஸிசன் 97 சதவீதம் என சீரான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதே போல் சசிகலாவுடன் சிறையில் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.