சசிகலா-வின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் எழுந்து நடக்க தொடங்கியிருப்பதாகவும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளும், மூச்சுத்திணறலும் குறைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சசிகலா வழக்கம் போல் சாப்பிடுவதாகவும், உதவியுடன் எழுந்து நடப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாக இருப்பதாகவும், லிட்டராக இருந்த ஆக்சிஜன் அளவு 3 லிட்டராக குறைத்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.